புதுடெல்லி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்கு வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் நேற்று புதிதாக 3,038 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21,179 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பலியான 9 பேருடன் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை 98.76 சதவீதமாக உள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.