கொத்தவரங்காய் வற்றல்

தேவையானவை:

கொத்தவரங்காய் – அரை கிலோ,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சற்று தடிமனான கொத்தவரங்காய்களாக தேர்வு செய்து வாங்கி வந்து, அடி, நுனி நீக்கிவிட்டு அலசி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். இது நன்கு காய வேண்டும். அதாவது உடைக்கும் பதம் வரும் வரை காய வேண்டும். பிறகு, எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தேவைப்படும்போது பொரித்துக்கொள்ளவும். ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவை கூடுதலாக இருக்கும். வத்தக்குழம்பிலும் சேர்க்கலாம்.

 

Related posts

விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்

காளான் பாஸ்தா

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்