கோபா அமெரிக்கா கால்பந்து; உருகுவேவை வீழ்த்தி பைனலில் கொலம்பியா

நியூயார்க்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் கனடாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி பைனலுக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு சார்லோட் அமெரிக்க அரங்கத்தில் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் கொலம்பியா-உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கார்னர் கிக் முறையில் அடித்த பந்தை லாவகமாக வாங்கிய கொலம்பியாவின் ஜெபர்ஸன் லெர்மா அதை கோல் ஆக்கினார். அதன் பின்னர் உருகுவே வீரரை தள்ளி விட்டதற்காக கொலம்பிய வீரர் டேனியல் முனோசுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இதனால் கொலம்பியா அணி 10 வீரர்களுடன் ஆட்டத்தை தொடர்ந்தது. அதன் பின்னர் ஆட்ட நேர முடியும் வரை இரு அணியினரும் கோல் அடிக்காத நிலையில் 1-0 என்ற கணக்கில் உருகுவேவை கொலம்பியா வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ச்சியாக 28 போட்டிகளில் வெற்றிக்கண்ட கொலம்பியா அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மியாமி ஹார்ட் ராக் அரங்கத்தில் நடக்கும் இறுதி போட்டியில் நடப்பு உலக சாம்பியனும், கோபா அமெரிக்க சாம்பியனுமான அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

 

Related posts

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 185-ஆக அதிகரிப்பு : 211 பேரின் கதி என்ன ?

சென்னை விமானநிலையத்தில் தீவிரவாத செயலை முறியடிக்க சிறப்பு பாதுகாப்பு ஒத்திகை

கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித்ஷா