கூட்டுறவு சங்கங்கள் மூலம் டி.ஏ.பி.உரம் வழங்க துரை வைகோ எம்பி கோரிக்கை

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மக்காசோளம், உளுந்து, பாசிப் பயிர் உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளார்கள். அதற்கு அடி உரமாக டி.ஏ.பி. தேவைப்படுகிறது. விவசாயிகள் தனியார் கடைகளில் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்றால், அதனுடன் வேறு ஏதாவது உரத்தையும் சேர்த்து வாங்கச் சொல்கிறார்கள் என புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்கள். இது போன்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு பயிர்களின் அடி உரமான டி.ஏ.பி. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

லட்டு கலப்பட விசாரணை தற்காலிக நிறுத்தம்: ஆந்திரா டிஜிபி தகவல்

இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு மத்தியில் லெபனானில் சிக்கி தவிக்கும் 900 இந்திய ராணுவ வீரர்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி நிதி: மகாராஷ்டிராவுக்கு ₹1,492 கோடி