குன்னூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பிரம்மகமலம் பூ: வியப்புடன் பார்த்து ரசித்த குடியிருப்புவாசிகள்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் பூக்கள் ஒரு வீட்டில் பூத்திருப்பதை குடியிருப்புவாசிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு செடி, கொடிகள் மற்றும் தாவர வகைகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் குன்னூரில் ராம்குமார் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் செடியில் பூக்கள் பூத்துள்ளன.

இந்த அதிசய பூ குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், ஆர்வமாக பார்த்ததுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். வெண்மை நிறம் கொண்ட பிரம்மகமலம் பூ இரவில் பூத்து சிலமணி நேரங்களில் உதிர்ந்துவிடும். நறுமணம் கொண்ட இந்த பிரம்மகமலம் பூ, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பூக்கும் தன்மை கொண்டவை. இதற்கு நிஷாகந்தி என்ற சிறப்பு பெயரும் உள்ளது.

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு