குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

ஊட்டி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சபரீசன். இவர், தனது காரில் உறவினர்களுடன் கோவையில் இருந்து சொந்த ஊரான அச்சனக்கலுக்கு நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நந்தகோபால் பாலம் பகுதியில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் காற்று பலூன் இருந்ததால் காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனை அறிந்து, அவ்வழியாக வந்த வாகன ஓட்டுநர்கள் குன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் மற்றும் வாகன ஓட்டுநர்கள் இணைந்து அவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின், கிரேன் உதவியுடன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம் மீட்கப்பட்டது. தற்போது மழைக்காலம் என்பதாலும், சாலைகள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் காணப்படுவதாலும் வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க வாகன ஓட்டிகளை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு