குன்னூரில் தொழிற்சாலையை உடைத்து சாக்லேட் ருசித்து வந்த கரடிகளுக்கு ‘செக்’

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது ஹைபீல்டு. இங்கு சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் சேகர். கடந்த சில நாட்களாக மேற்கூரையை உடைத்து உள்ளே புகும் கரடிகள் சாக்லேட்களை தின்பது சிசிடிவியில் பதிவாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து தயாரிக்கும் சாக்லேட்டுகளை மாற்று இடத்தில் வைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து ஒளிரக்கூடிய ஸ்பீக்கருடன் சந்தைக்கடை போல் மக்கள் சத்தத்தை பதிவு செய்து பென்டிரைவ் மூலம் ஒலி பரப்பினார். அப்போது அந்த பகுதியில் வந்த கரடி கூட்டம் மக்கள் அதிகம் உள்ளதாகவும், வண்ண விளக்குகள் எரிவதால் சாக்லேட்டுகளை ருசிக்க முடியாது என்று திரும்பிச்சென்றுள்ளன. அதன்பின்னர் கரடிகள் தொழிற்சாலைக்கு வருவதில்லை என்று உரிமையாளர் தெரிவித்தார்.

Related posts

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு

பனப்பாக்கத்தில் நாளை தொழிற்பூங்கா அடிக்கல் நாட்டு விழா முதல்வர் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்

தென்னிந்தியாவில் பவாரியா கும்பல் கைவரிசையா? குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் சேசிங்..வடமாநில கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!