குன்னூர் சுற்று வட்டாரத்தில் வளர்ச்சி பணிகள் மும்முரம்

*மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஊட்டி : குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்து பணிகளை தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் இளித்தொரையில் தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பசுமை குடில்களை ேபாக்குவரத்துத்துறை அரசு சிறப்பு செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பார்வையிட்டு, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பழ நாற்று தொகுப்பை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தேனலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.31.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதலாக 2 வகுப்பறைகளையும், உபதலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பெண்கள் கழிப்பறை, உபதலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வகுப்புகள், உபதலை கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவ முகாமினை பார்வையிட்டு 8 பேருக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார்.

ஒரு நபருக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டார்.zகுன்னூர் அருகே பழத்தோட்டம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குப்பை குழி முதல் சோகத்தொரை வரை ரூ.1.76 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வரும் சாலை பணி, வசந்தம் நகர் பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் பணிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி ஆகியவற்றையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஷ்வரி, குன்னூர் ஆர்டிஓ பூஷணகுமார், செயற்பொறியாளர் செல்வகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமாரமங்கலம், வட்டாட்சியர் கனி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி