சமையல் கூடம், அங்கன்வாடி பணிகளை கலெக்டர் ஆய்வு

குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடம், சமையல் கூடம், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன், அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலெக்டருக்கு உள்ளாட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சால்வை கொடுத்து வரவேற்றனர். பின்னர் அதிகாரிகளிடம், ”ஒருநாள் டிராமா வேலை எல்லாம் வேண்டாம், எது தேவையோ அதை மட்டும் செய்யுங்கள், நான் வருவதற்காக பிளீச்சிங் பவுடர்கள் எல்லாம் தெளித்துள்ளீர்கள், இதனை பொதுமக்கள் பார்த்தால் யாரோ அதிகாரிகள் வருவதற்காக இதெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். தினமும் எப்படி சுத்தம் செய்ய வேண்டுமோ அப்படியே செய்யுங்கள். இதுபோல ஒருநாள் டிராமா வேண்டாம் என கலெக்டர் கூறினார். இதனைகேட்டுக் கொண்ட அதிகாரிகள் அதன்படி நடப்பதாக உறுதியளித்தனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு