சமையல் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? எனில் இந்தத் திட்டம் உங்களுக்குத்தான்!

பெண்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்கும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், மேலும், அவர்களின் பெரிய பெரிய கனவுகளை கூட சின்ன சின்ன வழியில் நிறைவேற்ற அரசு சார்பில் உதவியாக சில திட்டங்களின் பெயரில் வங்கியில் கடன் வழங்கப்படுகிறது. எந்த துறையாக இருந்தாலும், இல்லத்தரசிகளாகட்டும், அல்லது பெரிய நிறுவனங்களில் ஏற்கனவே தொழில் முனைவோராக இருப்பவர்களாகட்டும்.. அவர்களுக்கென பல திட்டங்களில் அவர்களின் விருப்பம் மற்றும் தொழிலிற்கேற்ப நிதி வழங்கி வருகிறது. அதில் குறிப்பிட்ட இரண்டு திட்டங் களைப் பற்றியும் இதன்மூலம் பயன்பெறும் வாடிக்கையாளர்கள், துறைகள் மற்றும் அதற்கான கடன்தொகை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.

1. தேனா சக்தி திட்டம்

தேனா சக்தி திட்டத்தை பற்றி எளிதாக குறிப்பிட வேண்டுமென்றால், மலிவு விலையில் ( குறைந்த வட்டிவீதம்) நிதிஉதவி வழங்கும் திட்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தேனா சக்தி திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொகை மற்றும் அதனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் :

தேனா சக்தி திட்டத்தின் பெயரில் பெண்கள் தங்களின் தங்களுக்கென ஒரு தொழிலை அமைத்துக்கொள்ளவும், தொழிலை மேம்படுத்தவும் தேனா வங்கியின் மூலம் ஐம்பது ஆயிரம் முதல் இருபது லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகையினை 0.25% வட்டி வீதத்தில் திரும்ப செலுத்தும் வகையிலும், திரும்பிப் செலுத்தும் கால அவகாசம் 10 ஆண்டுகள் வரையிலும் வழங்கப்படுகிறது.

பயன் பெறும் துறைகள் :

இந்த தேனா சக்தி திட்டத்தின் மூலம், சிறு குறு தொழில் துவங்கும் பெண்கள் குறிப்பாக, கிராமப் புறங்களில் இருக்கும் பெண்கள்தான் அதிகம் பயன் பெறுகின்றனர். அவர்களின் தொழிலினை துவங்கவும், விவசாயம், மைக்ரோ கிரிடிட் யூனிட்டுகள் அமைக்கவும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

கடன் பெற தகுதிகள் :

நிறுவனத்தின் 50% மேற்பட்ட பங்கினை வைத்திருக்கும் பெண் முனைவோருக்கான வங்கிக்கடன்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் :

தேனா வங்கியில் இந்த கடனுக்கான விண்ணப்பம் பெற்று, அதில் கேட்டிருக்கும் விவரங்களை கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
( தேனா வங்கி என்பது 2019-ல் பேங்க் ஆப் ப்ரோடவுடன் இணைந்த அரசு சார்ந்த வங்கி)
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க,
*அடையாள அட்டை : பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை
*முகவரி சான்று : பாஸ்போர்ட், சொத்துவரி கட்டண ரசீது, மின் கட்டண ரசீது
*வங்கி கணக்கு விவரங்கள் மற்றும்
*விண்ணப்பிக்கும் நபரின் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

2. அன்னபூரணி யோஜனா திட்டம்

பெண் சமையல் கலைஞர்கள் அவர்களின் துறையில் தாங்கள் நினைத்த இடத்தை அடைவதற்கும், தங்களுக்கென ஒரு உணவகம் அல்லது க்ளவுட் கிட்சன் அமைப்பில் தங்களின் தொழிலை முன்னெடுத்துச் செல்ல அரசு சார்பில் வழங்கப்படும் ஒரு வகை நிதியுதவி.

கடன் தொகை :

இதன் கடன் தொகை ஐம்பதாயிரம் வரை அவர்களின் தேவைக்கேற்ப வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சமையல் துறைக்கு தேவையான பாத்திரங்கள், தண்ணீர் சுத்திகரிப்பகங்கள், உணவகத்திற்கு தேவையான அடுப்புகள், உணவு மேசைகள், எரிபொருள் இணைப்பு, மற்றும் குளிர்சாதனப்பெட்டி என அனைத்தையும் வாங்க இயலும்.

கடனை திரும்பச் செலுத்தும் கால நேரமும், அதன் வட்டி வீதமும் :

SBI வங்கியில் வழங்கப்படும் இந்த கடன் தொகையினை 3 ஆண்டு கால அவகாசத்தில் அதாவது, 36 மாதங்களில் திரும்பி செலுத்தும் விதமாகவும், அதில் முதல் மாதம் தவணை செலுத்த வேண்டிய கட்டாயம் கிடையாது எனவும் சொல்லலாம். மேலும், இதற்கான வட்டி வீதம், அப்போதைய சந்தை நிலவரத்தினை பொறுத்து மாறும்.

அன்னபூரணா திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் :

இந்த அன்னபூரணா யோஜனா திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை பற்றியும், இந்த திட்டத்தைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள பெண்கள் அருகில் உள்ள SBI வங்கியினை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களுக்கென சொந்தமான கேட்டரிங்க் தொழிலை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கடையினை விரிவுபடுத்தவும் துவங்கலாம்.
– காயத்ரி காமராஜ்.

Related posts

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்