குக்கர் மாதிரி டிடிவி முகமும் குண்டா இருக்கு… ரசிக்கும் மனைவி

தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். அரசியல் பாதையை துவங்கியது தேனி தொகுதி. இந்த தொகுதிக்கு நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவரே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி செய்தாரோ அதேபோல மீண்டும் செய்வார். அவர் என்னோடும், என் மகளோடும் இருந்ததை விட உங்களோடு இருந்ததுதான் அதிகம். ஆர்.கே.நகரில் கிடைத்தது இந்த குக்கர் சின்னம். ஆர்.கே.நகரில் பட்டன் தேயும் அளவிற்கு வாக்களித்தனராம். அதைபோல இந்த தேனி தொகுதியிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். குக்கர் சின்னம் நீங்கள் வீட்டில் பார்க்கும் குக்கர் போன்றது. அந்த குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கு குண்டா? அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும். குக்கர்னா டிடிவி, டிடிவினா குக்கர். குக்கருக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் வளர்ச்சிக்கான ஓட்டு’’ என்றார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு