கட்டுப்பாடு அவசியம்

கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் என அவர்களின் நேரடி கல்வி என்ற கலாச்சாரம் மாறியது. செல்போனில் டேட்டாவை ஆன் செய்தபோதே ஆபாச படங்கள் வரிசை கட்டி வந்தன. அவற்றை, முதன் முதலாக செல்போனை பயன்படுத்தும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கட்டுப்படுத்த தெரியவில்லை. சில வாரங்களில் இந்த காட்சிகளும் மாணவர்களிடம் பழகிவிட்டது.

செல்போன்களை, படிக்கும் தங்கள் குழந்தைகளிடம் தரக்கூடாது என்று உறுதியுடன் இருந்த பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என புது செல்போன் வாங்கி தந்தனர். எனினும் அவர்களுக்குள் ஆபாச படங்களின் கவலை மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், ஓடிடி ேபான்றவற்றில் ருசி கண்ட மாணவ-மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் செல்போனை தேடுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடுமையாக பெற்றோர் எச்சரித்தால், எங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று மாணவர்கள் கேட்க… பெற்றோர் மவுனமாகவே இருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனால் பெற்றோர் குழந்தைகளின் நம்பிக்கையை இழக்க விரும்பாமல் செல்போனை அவர்களிடமே கொடுத்துவிட்டனர். மாணவர்களுடன் மாணவிகள் செல்பி எடுத்தபோதும், அதை போனில் சேமித்து வைத்திருந்தபோது தான் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ‘ராங்’ ரூட்டில் ெசல்வதை கண்டறிந்தனர்.

மேலும், பள்ளி விட்டு வந்தவுடன் அம்மா என்று அழைத்தபடி வந்த பிள்ளைகள், இப்போது ரூமுக்குள் சென்று முடங்கி கிடக்கின்றனர்.  படிக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் வரப்பிரசாதகமாகவும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அவர்கள் தங்கள் பாடத்தில் எழுந்த சந்தேகங்களை யூடியூப் போன்ற தளங்களில் இருந்து பார்த்து சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர். அதேசமயம் மாணவர்களின் மொபைல் போன்களில் ஆபாச வீடியோ காட்சிகளை பதிவு செய்து கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தொடர்ந்து நடக்கிறது.

மாதந்தோறும் புதுப்புது வசதிகளுடன் ‘‘பிறக்கும்” மொபைல் போன்களால் உலகமே நம் பாக்கெட்டில் அடங்கி கிடக்கிறது. இதை சிலர் தவறான வழிக்கும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மாணவர்கள் மொபைல் போனில் ஆபாச படம் பதிவு செய்து சக மாணவர்களிடம் காட்டி ‘‘ரசிகர் பட்டாளத்தை” சேர்க்கின்றனர். இதில், வீடுகளில் நடக்கும் ‘‘ரகசியங்கள்” குறித்த ”அமெச்சூர் வீடியோவுக்கு” மவுசு அதிகம்.

இதற்காகவே சில கடைகளில் ரூ.50 முதல் ரூ.100 வரை பெற்றுக்கொண்டு ‘‘மெமரி கார்டில்” ஆபாச காட்சிகளை பதிவு செய்து கொடுப்பது தொடர்ந்து நடக்கிறது. இதுமட்டுமல்லாமல் பிளே ஸ்டோரிலேயே கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்தும் கொள்ளும் வகையில் ஆபாச ‘ஆப்’களும் மலிந்து கிடக்கின்றன. நாளடைவில், அந்த காட்சிகளை பார்க்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய துணிகின்றனர். செல்போன்களில் நெட் ஆன் செய்தாலே ஆபாச படங்கள் வருவதை தடுக்க ஒன்றிய அரசு அதிரடி சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்து செயல்படுத்தினால் மட்டுமே எதிர்கால இந்தியாவை உருவாக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Related posts

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு