8 மாவட்டங்களில் தொடர் கனமழை ரூ.10 கோடி காலண்டர் உற்பத்தி பாதிப்பு

சிவகாசி: புத்தாண்டை ஒட்டிவிருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் தயாரிப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 50 சதவீத காலண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசியில் காலண்டர் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் காலண்டர்கள் ஆர்டர் கொடுத்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டுமே காலண்டர்களை கேட்டு வாங்கி வருகின்றனர். பெரும்பாலும் ஆர்டர் கொடுத்தவர்கள் காலண்டர் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.

காலண்டர் உற்பத்தியாளர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, ‘‘ சென்னை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் பெய்த கனமழை சிவகாசி காலண்டர் தொழிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டர் கொடுத்த பல பேர் கேட்கவில்லை என்பதால் உற்பத்தி செய்யப்பட்ட காலண்டர்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இந்த 8 மாவட்டங்களில் இருந்து புதிய ஆர்டர்கள் வராததால் ரூ.10 கோடி மதிப்பிலான காலண்டர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’’, என்றார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி