தொடர் விடுமுறையால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது: ஆம்னி பஸ்களில் கட்டணம் 30 சதவீதம் உயர்வு

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக தனியார் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணங்கள் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்களின் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை முதல் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு பஸ்களையும் தமிழக அரசு இயக்குகிறது . பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னை – கன்னியாகுமரி ஏசி பஸ் ரூ.3,000, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை – நெல்லை ஏசி பஸ் ரூ.2,450, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை – மதுரை ஏசி பஸ் ரூ 2,000, சாதாரண பஸ் ரூ. 1,200 வரை என டிக்கெட் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒருசில பஸ்களில் மட்டுமே சில இடங்கள் காலியாக உள்ளன. தேவை அதிகரித்து வருவதால் தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தினர். ஏ.சி. பஸ்களில் உட்கார்ந்து பயணம் செய்யவே ரூ.2000 வரை வசூலிக்கிறார்கள். மதுரை, திருநெல்வேலிக்கு படுக்கை வசதி ரூ.3000 முதல் ரூ.4000 வரை வசூலிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் பொதுவாக வெளியூர் பயணம் குறைவாக இருக்கும் என்பதால் கட்டணத்தை குறைத்து விடுவார்கள். ஆனால் தற்போது தொடர் விடுமுறை வருவதால் அதை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை கூட்டி விட்டனர். கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் பெரும்பாலான பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் கட்டணத்தை மேலும் உயர்த்தி வருகின்றனர். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகரித்து உள்ளது.

Related posts

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது