தொடரும் ரயில் விபத்துக்கள் ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 1.52லட்சம் காலி பணியிடங்கள்: ஆர்டிஐ மனுவுக்கு ரயில்வே பதில்

புதுடெல்லி: ரயில்வே துறையில் பாதுகாப்பு பிரிவில் மட்டும் 1.52லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக ஆர்டிஐ மனுவுக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர கவுர் என்பவர் ரயில்வே துறையில் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் காலியாக உள்ள லோகோ பைலட் பணியிடங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ‘‘ரயில்வேயில் 1.03.2024ம் தேதி நிலவரப்படி பாதுகாப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 10,00,941 ஆகும். மேலும் பணிபுரியும் பணியிடங்களின் எண்ணிக்கை 8,48,207. ரயில்வேயின் பாதுகாப்பு துறையில் 1,52,734 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட லோகோ பைலட் பணியிடங்கள் மொத்தம் 70,093.

இதில் 14,429 லோகோ பைலட் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனினும் ரயில்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை இந்த விஷயத்தில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. ரயில்வேயின் பல கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான மேம்பாடுகள் மூலமாக பாதுகாப்பான செயல்பாடுகளில் நேர்மறை தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு