தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதியில் பக்தர்கள் அதிகரிப்பு 36 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதலான எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்புத்தாண்டையொட்டி நேற்று அரசு விடுமுறை, இன்று சனி, நாளை ஞாயிறு என 3 நாட்கள் தொடர்விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

நேற்று 66,310 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,980 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.16 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பி வெளியில் என்ஜிஆர்எச் கட்டிடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்