ராமநாதபுரம் ஆட்சியர் மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு


மதுரை: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை முடித்துவைத்தது. அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் சுகுமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். செவ்வூர் பஞ்சாயத்து நிதி முறைகேட்டில் நடவடிக்கை எடுக்காத ராமநாதபுரம் ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். போகலூர் பிடிஓ கணேசன், உதவி செயற்பொறியாளர் அர்ச்சுனன் மீது ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் புகார் தொடர்பாக 12 வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு

காங்.கின் தாஜா செய்யும் கொள்கையால் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது: அமித் ஷா குற்றச்சாட்டு