நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.பிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சையது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிவு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு குறித்து விளக்கமளிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சுப்ரீடென்ட் எஸ்.பியை ஆஜராகும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டிருந்தார். ஆனால் கடந்த முறை நடந்த விசாரணையின் போது எஸ்.பி நேரில் ஆஜராகவில்லை இதை அடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் நெல்லை மாவட்ட போலீஸ் சுப்ரீடென்ட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத காரணத்தால் அவரை ஜாமினில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த வழக்கை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்