ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமியை வரவேற்றார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா..!!

டெல்லி: டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இடதுசாரி எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

இதில் சுமார் 38 கட்சிகள் பங்கேற்பதாக நேற்றைய தினம் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார். தற்போது இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வருகை தந்திருந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை அதிமுக எம்.பி.க்கள், தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். தற்போது அசோகா ஹோட்டலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரவேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் உடன் இருந்தார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது