அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு கலையரங்கம் கட்டுமான பணி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்துவதற்காக கலாச்சாரம் மையம் ரூ.44.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைய கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ வேலு, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணிகளின் செயல்பாடுகள் மற்றும் கட்டிட அமைப்பு கட்டுமான பணிகளின் தரம் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அரசுக்கு சொந்தமான மொத்தமுள்ள 66 ஏக்கர் நிலப்பரப்பில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு கலாச்சார மைய பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்க ஒப்பந்த கால நிர்ணயம் செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் தொடர்பாகவும், இந்த கலாச்சார மையத்திற்கு வரக்கூடிய சாலை கலாச்சார மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமையப்பட உள்ள பல்வேறு கட்டிட பணிகள் குறித்து அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு