அருந்ததி நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

பெரம்பூர்: அருந்ததி நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட அருந்ததி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன் பதித்த குடிநீர் குழாய்கள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து குறிப்பிட்ட அருந்ததி நகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் முடிவு செய்தது.

அதை தொடர்ந்து, ரூ4.02 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, மேயர் பிரியா, மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பகுதி பொறியாளர் பாக்கியலட்சுமி, துணைப் பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்