ஒன்றிய அரசின் கட்டிட ஆராய்ச்சி துறையில் வேலை

ஒன்றிய கட்டிட ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

Technical Assistant: 24 இடங்கள் (பொது-9, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-4).
சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 28க்குள்.
தகுதி: சிவில் இன்ஜினியரிங்/ஆர்க்கிடெக்சர் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/தகவல் தொழில்நுட்பம்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல்/இயற்பியல்/நிலத்தியல்/ நூலக அறிவியல் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
டிரேடு தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://www.cbri.res.in/career-opportunities/recruitment என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2024.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு