அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை மீறல் மனைவியின் செல்போன் உரையாடலை கணவன் பதிவு செய்வது சட்டப்படி தவறு: சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிலாஸ்பூர்: ஒருவருக்கு தெரியாமல் அவருடைய செல்போன் உரையாடலை பதிவு செய்வது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், மகாசமந்த் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்(38) அவருடைய கணவருக்கும்(44) இடையேயான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தனது கணவரிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தனது மனைவி வேறு ஒருவருடன் ரகசியத் தொடர்பு வைத்துள்ளார். எனவே அவருடைய செல்போனில் பதிவான குறிப்பிட்ட உரையாடல் குறித்து அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி கணவர் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம் கடந்த 2021 அக்டோபர் 21ம் தேதி நீதிமன்றம் அவருடைய மனுவை ஏற்று கொண்டது.

இதை எதிர்த்து, கடந்த ஆண்டு சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மனுதாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 5ம் தேதி சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டே முன்பு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, மனைவிக்கு தெரியாமல் அவருடைய செல்போன் உரையாடல்களை கணவர் பதிவு செய்தது சட்டப்படி தவறு. இது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனுதாரரின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று கூறி குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

Related posts

புதிய சிந்தனையுடன்… புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்!

நிச்சயம் வேண்டும் லட்சியம்!

கரும்புச் சக்கையில் பயோ பொருட்கள் தயாரித்து அசத்தும் இளைஞர்!