அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது: திருமாவளவன் அறிக்கை

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் இதன் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாக்கவே இந்திய மக்களோடு இக்கூட்டணி இணைந்து களமாடியது. இதனடிப்படையில், காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 99 இடங்கள் உள்ளிட்ட 234 இடங்களில் ‘இந்தியா கூட்டணி’ பெற்றுள்ள வெற்றி இந்திய மக்களுக்கான மாபெரும் வெற்றியே ஆகும்.

பாஜ பெற்றுள்ள வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றியே ஆகும். தனிப் பெரும்பான்மை கொடுக் காமல் மக்கள் பாஜகவுக்கு எதிராகவே தீர்ப்பை எழுதியுள்ளனர். பெரும்பான்மை இந்துச் சமூகமே பாஜவைப் புறக்கணித்துள்ளது என்பதுதான் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மையாகும்.

இத்தகைய வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய இந்திய மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து சாதிய- மதவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

என்.எஸ்.எஸ் மாணவர் பேரியக்கமும் செயல்பாடுகளும்!

மண்டல அளவில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூரில் சிறப்பாக பணியாற்றும் திமுகவினருக்கு நற்சான்று, பணமுடிப்பு: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

தனியார் பள்ளிக்கான புதிய சட்டத்துக்கு எதிராக மனு