40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர் நியமனம்: எடப்பாடி பழனிசாமி பட்டியல் வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கொண்ட பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் மாதாவரம் மூர்த்தி, வடசென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி வெங்கடேஷ் பாபு, தென்சென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, விருகை ரவி, தி.நகர் சத்யா, மத்தியசென்னை தொகுதிக்கு தமிழ்மகன் உசேன், ஆதிராஜாராம் மற்றும் பாலகங்கா, பெரும்புதூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், டி.கே.எம்.சின்னையா, காஞ்சிபுரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை