மத்திய துணை ராணுவப் படைகளில் 39,481 கான்ஸ்டபிள்கள்

படை வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. பிஎஸ்எப் : 15,654 இடங்கள் (ஆண்- 13,306, பெண்- 2,348)
2. சிஐஎஸ்எப் : 7,145 இடங்கள் (ஆண்-6,430, பெண்-715)
3. சிஆர்பிஎப் : 11,541 இடங்கள் (ஆண்-11,299, பெண்-242)
4. எஸ்எஸ்பி : 819 இடங்கள் (ஆண்கள் மட்டும்-819).
5. இந்தோ-திபெத் போலீஸ்: 3017 இடங்கள் (ஆண்- 2564, பெண்-453)
6. ஏஆர் : 1248 இடங்கள் (ஆண்-1148, பெண்-100)
7. எஸ்எஸ்எப் : 35 இடங்கள் (ஆண்கள் மட்டும்-35)
8. என்சிபி : 22 இடங்கள் (ஆண்-11, பெண்-11).

சம்பளம்: ரூ.21,700-69,100. வயது; 1.1.2025 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்சிசி பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்ச உயரம் 170 செ.மீ., (எஸ்டி பிரிவினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 80 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர்கள் 150 செ.மீ., இருக்க வேண்டும்.

ஆண்கள்: 5 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள்: 1.6 கி.மீ., தூரத்தை 8½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

எஸ்எஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் General Intelligence, Reasoning, General Knowledge, General Awareness, Elementary Maths, English ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் கேள்விகள் கேட்கப்படும். சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய மையங்களில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடைபெறும்.

கட்டணம்: ரூ.100/-இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2024.

Related posts

தென்னிந்தியாவில் பவாரியா கும்பல் கைவரிசையா? குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் சேசிங்..வடமாநில கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றி ஹெல்மெட் அணிந்து இருந்தால் ஊக்கப்பரிசு

திருமணம் செய்வதாக ₹2 கோடி மோசடி பிரபல யூடியூபர் மீது போலீசில் இளம்பெண் பலாத்கார புகார்