பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. கடையநல்லூர் ரயில் நிலையத்தை அடுத்த சங்கனாப்பேரி பகுதியில் இரவு 7.15 மணியளவில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பாறாங்கல் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதை பார்த்ததும் இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல தவிர்க்கப்பட்டது. பின்னர் டிரைவர் கல்லை அகற்றினார். அதன்பின் சுமார் 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து இன்ஜின் டிரைவர், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் தலைமையில் நெல்லை ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து வில்லிப்புத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா?, பாறாங்கல்லை வைத்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்; புதிய இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்: ராமதாஸ் வேதனை