பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 66 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சயிம் அயூப் 49, அப்துல்லா ஷபிக் 23, இப்திகார் அகமது 31, கேப்டன் ஷதாப் கான் 28 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.4 ஓவரில் 116 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

10வது வீரராகக் களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிகபட்சமாக 21 ரன் எடுத்தார். ரகமதுல்லா 18, முகமது நபி 17, கேப்டன் ரஷித் கான் 16, உஸ்மான் கானி 15 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான், இசானுல்லா தலா 3 விக்கெட், முகமது வாசிம், ஸமான் கான், இமத் வாசிம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் 66 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற நிலையில், ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

Related posts

சில்லிபாயின்ட்…

வங்கத்தின் வேகத்தில் சரிந்த இந்தியா அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது: கை கொடுத்த ஜடேஜா, ஜெய்ஸ்வால்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா