மன்னிப்பு கடிதம் தந்தால் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதை பரிசீலிப்போம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் சேருபவர்கள் மட்டுமே, அதிமுக உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் பொதுச் செயலாளருக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாக கருதப்படுவர்.

எம்.ஜி.ஆர், ெஜயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி தேவை: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி சி.ஐ.எஸ்.எப். கட்டுப்பாட்டுக்குள் வந்த கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவமனை