கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யத் தடை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் மனு

சென்னை: பிரதமர் மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய வருகை தரும் போது, அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக காங்கிரஸ் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம், வி.இஸட்.விக்டர், என்.அருள் பெத்தையா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் நேற்று மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி, மே 30 முதல் ஜூன் 1ம் தேதி வரை கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளள இருப்பதாக அறிவித்துள்ளார். விவேகானந்தர் பாறை, பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்க கூடாது. வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது. இதுகுறித்து காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனு தாக்கல் செய்தபோது பதிவுத்துறை அதை ஏற்க மறுத்துவிட்டது. எனவே, சுற்றுலா பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!