காங்கிரஸ் எம்எல்ஏ மறைவு இருஅவையிலும் மவுன அஞ்சலி: இரங்கல் தீர்மானத்துக்கு பிறகு நாளை வரை பேரவை ஒத்திவைப்பு

பெங்களூரு: யாதகிரி மாவட்டம் சோலாபுரா தொகுதி எம்எல்ஏ ராஜா வெங்கடப்பா நாயக் மறைவுக்கு பேரவை, மேலவை ஆகிய இரண்டு அவையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு புதன்கிழமை வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் யுடி காதர் அறிவித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ ராஜா வெங்கடப்பா நாயக் மரணம் அடைந்த நிலையில் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து பேரவை செயலாளர் காலை 9.30 மணிக்கு பேரவையில் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்ற விவரத்தை தெரிவித்தார். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பேரவை நேற்று காலை கூடியதும், சபாநாயகர் யுடி காதர், ‘‘உறுப்பினர் ராஜா வெங்கடப்பா நாயக் மரணம் குறித்து இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். சபாநாயகர் யுடி காதர் பேசுகையில், ராஜா வெங்கடப்பா நாயக் 1957 நவம்பர் 23ல் பிறந்தார். யாதகிரி மாவட்டம் சுரபுராவில் சேர்ந்த வெங்கடப்பா நாயக், 1994ல் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக வெற்றி பெற்றார். அதன் பிறகு 1999, 2013 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் நடப்பு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த அவரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எளிமையானவர், அவரின் மறைவு மாநிலத்திற்கு பேரிழப்பாகும் என பேசினார்.

பின்னர் இரங்கல் தீர்மானத்தை ஆதரித்து முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘‘தனியார் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இவ்வளவு விரைவில் நம்மை விட்டு மறைவார் என எதிர்பார்க்கவில்லை. நான்கு முறை வெற்றி பெற்ற அவர், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இரும்பாலை தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா வெங்கடப்பா நாயக் சிறப்பாக செயலாற்றினார். அவரின் இழப்பை தாங்குகிற சக்தியை குடும்பத்தினருக்கு இறைவன் தரவேண்டும் என வேண்டுகிறேன் என்றார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக், துணை முதல்வர் டிகேசிவகுமார், அமைச்சர்கள் ஜமீர்அகமது கான், பிரியாங்க் கார்கே மற்றும் உறுப்பினர்கள் அரக ஞானேந்திரா, அஜய் தரம்சிங், நாகராஜ் உள்ளிட்டோர் பேசினர். அதன் பிறகு சபாநாயகர் யுடி காதர், பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தப்பட்ட உறுப்பினரின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்து அவை நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். முன்னதாக ராஜா வெங்கடப்பா நாயக் மறைவுக்கு பேரவையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பேரவையை தொடர்ந்து மேலவையிலும் எம்எல்ஏக்கள் ராஜா வெங்கடப்பா நாயக் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, மாஜி எதிர்க்கட்சி தலைவர் பிகே ஹரிபிரசாத் உள்ளிட்டோர் பேசினர். அதன் பிறகு மேலவையிலும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு நாளைகாலை 9.30 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவித்தார்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா