காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது: புதிய எம்பிக்கள் கூட்டமும் நடக்கிறது

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை பிடித்தது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஓட்டல் அசோக்கில் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் அதன் செயல்திறனை ஆய்வு செய்து கட்சியை வலுப்படுத்த தேவையான அறிக்கைகளை அளிக்க உள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அதை தொடர்ந்து மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Related posts

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!