சுவேந்து அதிகாரி, தபாஸ் ராய்க்கு எதிரான சிபிஐ வழக்குகள்: பாஜவின் வாஷிங்மெஷினால் கழுவப்பட்டு விட்டதா?.. பிரதமர் மோடிக்கு காங். கேள்வி


புதுடெல்லி: சுவேந்து அதிகாரி, தபாஸ் ராய்க்கு எதிராக சிபிஐ வழக்கு முடங்கியது ஏன் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘மேற்கு வங்க மாநில ரேசன் கடைகளில் பிரதமரின் முகத்தை காட்டாததற்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

பிரதமரின் புகைப்படங்கள், விளம்பர பலகைகளை வெளியிடும்படி மாநில அரசை வற்புறுத்தும் முயற்சியாக இது உள்ளது. ரூ.7000 கோடி நெல் கொள்முதல் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது மாநிலத்தின் நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத்திட்டத்திற்கான அரிசி கிடைப்பதை கடுமையாக பாதிக்கும். மக்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதை விட பிரதமரின் விளம்பரம் முக்கியமா? சுவேந்து அதிகாரி, தபாஸ் ராய்க்கு எதிரான சிபிஐ வழக்கு முடங்கியது ஏன்? அவர்களின் வழக்குகள் பாஜவின் வாஷிங் மெஷினால் கழுவப்பட்டுவிட்டதா?” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு