காங். மக்களவை தலைவர் சஸ்பெண்ட் எதிரொலி : சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க I.N.D.I.A கூட்டணி முடிவு!; அம்பேதகர் சிலை முன்பு போராட்டம்!!

புதுடெல்லி: காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க I.N.D.I.A கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முடிவு எடுத்துள்ளனர்.மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதம் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார். மக்களவையில் மாலை 5.10 மணிக்கு உரையை துவக்கிய அவர் 2.10 மணி நேரம் பேசினார். இதில் பெரும்பாலான நேரம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். மணிப்பூர் குறித்து சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் நேற்று பேசியதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக மக்களவையில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.அதே சமயம், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அனைத்துக் கட்சி எம்பிக்களுக்கும் சபாநாயகர் தேநீர் விருந்து வைக்க உள்ளார். ஆனால் ங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டித்து சபாநாயகர் ஓம் பிர்லா வைக்கவுள்ள தேநீர் விருந்தில் I.N.D.I.A கூட்டணி கட்சி எம்பிக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.மேலும் 23 கட்சிகளை சேர்ந்த 142 மக்களவை எம்பிகள் சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி பேரணி சென்று அங்கு போராட்டம் நடத்துகின்றனர்.

Related posts

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்