காங்கிரஸின் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைப்பு

டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி ராகுல் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுலுக்கு சிறை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி