சிமெண்ட் துறையில் ஆதிக்கம்: அதானி குறித்து காங். எச்சரிக்கை


புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அடுத்தடுத்த நடந்த விஷயங்களை பாருங்கள்: செப்டம்பர் 2022: அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசியை வாங்கி நாட்டின் 2வது பெரிய சிமெண்ட் நிறுவனமாக மாறியது. ஆகஸ்ட் 2023: இந்தியாவில் ஒற்றை இடத்தில் செயல்படும் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமான சங்கி இன்டஸ்ட்ரீஸ் சிமெண்ட் நிறுவனத்தை அதானி குழுமம் கைப்பற்றியது. ஜூன் 2024: தென் இந்தியாவில் எஞ்சியிருக்கும் கடைசி பெரிய நிறுவமான பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்துகிறது.

அடுத்து வருபவை: சவுராஷ்டிரா சிமெண்ட், வத்ராஜ் சிமெண்ட்ஸ் நிறுவனங்களையும் அதானி குழுமம் வாங்க உள்ளது. நிறுவனங்கள் வளர ஏகபோக உரிமைகள் தோன்றாமல் இருப்பதையும், மற்ற நிறுவனங்களை கையகப்படுத்துதல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பதோடு, அரசியல் அதிகாரத்தால் தேவையற்ற ஆதாயம் பெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இவ்வாறு கூறி உள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி