தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் 72வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளம் மூலமாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: அருமைச் சகோதரர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை