காங்கிரஸ் தலித்துக்களுக்கு எதிரான கட்சி: அமித் ஷா விமர்சனம்


சண்டிகர்: அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தோஹானாவில் நடந்த பாஜ பிரசார கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி எப்போதும் தலித் தலைவர்களை அவமதிக்கிறது. அது அசோக் தன்வாராக இருந்தாலும் சரி அல்லது சகோதரி குமாரி செல்ஜாவாக இருந்தாலும் சரி. காங்கிரஸ் அனைவரையும் அவமதிக்கிறது.
காங்கிரஸ் கட்சியானது தலித்துக்களுக்கு எதிரானது. வளர்ச்சிக்கு பிறகு இடஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசினார்.

அவர்கள்(காங்கிரஸ்) வளர்ச்சிக்கு பிறகு இடஒதுக்கீட்டை அகற்றிவிடுவார்கள். அரியானா முழுவளர்ச்சி பெற்ற மாநிலம். உங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்றார்.

Related posts

பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!