நாளை இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: நாளை இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகியவை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி, தோல்வியடைந்த தேனி ஆகிய தொகுதிகள் தற்சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாக காங்கிரஸ் கட்சிக்கு இந்த 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் போட்டி பலமாக இருந்து வருகிறது. மேலும் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளதால் வாய்ப்பு கேட்டு முக்கிய நிர்வாகிகள் பலர் மேலிடத்தில் முட்டி மோதி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும். தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொகுதிக்கு 3 பேர் வீதம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சி தலைமையிடம் இன்று ஒப்படைக்கப்படும்.

ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். ஓபிஎஸ், டிடிவி தினகரன் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு