காங்கிரஸ் கட்சியின் எச்சரிக்கையை மீறி சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டம்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான முந்தைய பாஜ அரசின் ஊழல் தொடர்பாக தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் கெலாட் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். காங்கிரஸ் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சச்சின் பைலட் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்கள், எம்எல்ஏ சந்தோஷ் சஹாரன் மற்றும் ராம்நாராயணன் குர்ஜார் போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 4 மணிக்கு தொடங்கிய போராட்டத்தை மாலை 4 மணிக்கு அவர் முடித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய சச்சின், முன்னாள் பாஜ அரசின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். முன்னாள் பாஜ அரசின் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு