காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; தெலங்கானா முதல்வர் தேர்வில் இழுபறி

திருமலை: தெலங்கானாவில் காங்கிரஸ் முதல்வரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க மூத்த நிர்வாகிகள் இடையே எதிர்ப்பு நிலவியதால் முடிவை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நேற்று ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாணிக் ராவ் தாக்ரே எம்பி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுக்க ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் ஒரு மனதாக முதல்வரை தேர்ந்தெடுக்கும் முடிவை மூத்த நிர்வாகிகள் ஏற்கவில்லை. இதனால் யார் முதல்வர் என்பது குறித்து தீர்மானிக்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவுக்கு ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தெலங்கானா காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் நேற்று முதல்வர் 2 துணை முதல்வர், 3 அமைச்சர்கள் இரவு 8 மணிக்கு பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு இன்று (நேற்று) பதவியேற்பு இல்லை என மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ெதலங்கானா காங்கிரஸ் முதல்வர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி
தெலங்கானா முதல்வர் பதவிக்கு மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, மூத்த எம்எல்ஏக்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, டி. ஸ்ரீதர் பாபு ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

Related posts

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை