பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிக்க காங். எம்பி தனிநபர் மசோதா தாக்கல்

புதுடெல்லி: கேரளா,சாலக்குடி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பென்னி பெஹனன். காங்கிரஸ் எம்பியான பென்னி பகுத்தறிவு சிந்தனை மற்றும் விமர்சன சிந்தனைகளை ஊக்குவிப்பதற்கான மசோதா 2024- ஐ கடந்த வெள்ளியன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பென்னி பெஹனன் கூறுகையில்,‘‘ சமூகத்தில் அதிகரித்து வரும் மூட நம்பிக்கைகளையடுத்து பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிப்பதற்கான அவசர தேவை எழுந்துள்ளது. கடந்த 2014 முதல் விமர்சன சிந்தனைகள் ஊக்குவிக்கப்படவில்லை. நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, கடவுள்தான் என்னை இங்கு அனுப்பினார் என்று மோடி பேசும் நிலையில் பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய மசோதாவாகும் இது.

நாட்டின் முதல் பிரதமரான நேரு தான் பகுத்தறிவு சிந்தனை மற்றும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, விமர்சன சிந்தனைகள், மாறுபட்ட கருத்துகள் ஏற்கப்படுவது இல்லை. ஏனெனில் பிரதமரும் அவரது கட்சியினரும் பகுத்தறிவில்லாத, மூட நம்பிக்கைகளையே ஊக்குவித்து வருகின்றனர்.அரசின் கொள்கைகள்,திட்டங்கள், சமூக திட்டங்களில் அனுபவ ஆதாரங்கள், பகுத்தறிவு பகுப்பாய்வை ஊக்குவிக்கும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது