தெலங்கானா அரசியலில் பரபரப்பு பிஆர்எஸ் கட்சியிலிருந்து மூத்த எம்எல்ஏ விலகல்: ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய முடிவு

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் மைனம்பள்ளி ஹனுமந்த ராவ். இவர் பிஆர்எஸ் சார்பில் மல்காஜிகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆக.21ம் தேதி அறிவிக்கப்பட்ட 115 பேர் கொண்ட பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் பட்டியலிலும் மல்காஜிகரி தொகுதி ஹனுமந்தராவிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் பிஆர்எஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.

மேலும் பிஆர்எஸ் சார்பில் மல்காஜிகிரி தொகுதியில் போட்டியிட மறுத்துவிட்டார். ஹனுமந்த ராவ் நாளை மறுநாள் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக அவர் மல்காஜிகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹனுமந்த ராவ் தனது மகன் ரோஹித்தை மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட பிஆர்எஸ் கட்சியிடம் விண்ணப்பித்தார். அவரது விருப்பம் நிராகரித்ததால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்