பறிமுதல் குட்கா பதுக்கல் 2 போலீசார் இடமாற்றம்

பள்ளிபாளையம்: ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பெங்களூருவில் இருந்து வந்த ஒரு மினி லாரியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரகசியமாக பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து வேனை மட்டும் விடுவித்து உள்ளனர். இந்த விவரம் குறித்து வேன் டிரைவர் குட்கா அனுப்பிய உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஈரோடு மாவட்ட எஸ்பி.,க்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து குட்கா பதுக்கிய 2 போலீசார் ஈரோடு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க காத்திருந்ததாக பிரபல கூலிப்படை தலைவன் முருகேசன் துப்பாக்கி முனையில் அதிரடி கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

காவல்துறையில் கழிவுசெய்த வாகனங்கள் 21ம் தேதி ஏலம்

மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்த வழக்கு; செந்தில் பாலாஜி மீதான வழக்கு தள்ளிவைப்பு