ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆடியோ, வீடியோ வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக பாஜ பிரமுகர்களான ஆடுதுறை வினோத், சம்பா கட்டளை விக்னேஷ் மற்றும் செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை நிவாஸ் ஆகிய 4 பேரை கடந்த 28ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம், ஆதீன நேர்முக உதவியாளர் செந்தில், செய்யாறு வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகியோரை தேடி வந்தனர். முன்ஜாமீன் கேட்டு பாஜ மாவட்ட தலைவர் அகோரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் அகோரம் மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கடந்த மார்ச் 15ம் தேதி மும்பை சென்று அகோரத்தை கைது செய்தனர். மறுநாள் அவரை மயிலாடுதுறை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே வினோத், விக்னேஷ், குடியரசு, நிவாஸ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர். இந்தநிலையில் அகோரத்துக்கும் நேற்று மயிலாடுதுறை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து திருச்சி சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்