வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு; எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: விரைவில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

சேலம்: எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மிலானி. இவர் சேலம் 1வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, தனி நபர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், இடைப்பாடி தொகுதியில் போட்டியிட எடப்பாடி தாக்கல் செய்த வேட்புமனுவில் அசையும், மற்றும் அசையா சொத்துக்கள், தொழில், வருமான ஆதாரங்கள், சொத்துக்களின் சந்தை மதிப்பு, கல்வி தகுதி பற்றி தவறான தகவலை அளித்துள்ளார். சொத்து விவரத்தில் 6 இடங்களை மறைத்துள்ளார் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கலைவாணி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், விரிவான விசாரணை நடத்தி, வருகிற 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், சேலம் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, நேற்று எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ (I) (II) (III)ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, எடப்பாடி சொத்து விவரங்கள் குறித்து, விரைவில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை