சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.2000 கோடி வரை மோசடி

சென்னை: சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.2000 கோடி வரை மோசடி செய்துள்ளது. அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு புகார் அளித்து வருகிறார்கள். கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக கூறி முதலீட்டளார்களிடம் பணம் வசூலித்து சிவசக்திவேல் என்பவர் மோசடி செய்துள்ளார்.

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 ஆயிரம் வட்டி தருவதாக கூறி ரூ.2000 கோடி செய்ததாக குற்றசாட்டு வைத்துள்ளனர். கடந்த 8 மாதங்களாக மற்றும் அசலை திருப்பித் தராமல் துபாய்க்கு சிவசக்திவேல் தப்பி சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா, ஏ.ஆர்.டி, ஹிஜாவு நிறுவனங்கள் போல பிராவிடண்ட் டிரேடிங் கம்பெனியும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே