ரூ.30 லட்சம் கமிஷன் கேட்ட கர்நாடக பாஜ எம்எல்ஏ கைது

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருக்கும் செல்வராஜ், வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில், கழிவு மேலாண்மை டெண்டர் கொடுக்க ரூ.30 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று பாஜ எம்எல்ஏ முனிரத்னம் மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். மேலும் முனிரத்னம் தன்னை சாதி பெயரை கூறி அவமதிப்பு செய்துள்ளதாக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் வேலுநாயக்கரும் வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு புகார்கள் அடிப்படையில் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் முனிரத்னம் எம்எல்ஏ ஆந்திரா மாநிலத்திற்கு தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்த பெங்களூரு போலீசார் அவரை கோலார் மாவட்டம், நங்கிலி என்ற பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Related posts

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின