கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து கருத்து சொல்லுங்க: கேட்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி தனது ‘நமோ’ ஆப் மூலம், ஒன்றிய அரசு மற்றும் எம்பிக்களின் செயல்பாடு குறித்து கடந்த மாதம் சர்வே நடத்தினார். இதில் மக்களின் கருத்துப்படி, சரியாக செயல்படாத எம்பிக்களுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அடுத்த சர்வே குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நமோ ஆப் இல் உள்ள ‘ஜன் மேன் சர்வே’ மூலம் உங்கள் கருத்தை நேரடியாக என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’’ எனக் கூறி, சர்வேயில் பங்கேற்பதற்கான இணைப்பை பகிர்ந்துள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!