பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு கோயிலில் கொடி மரம் முறிந்து விழுந்தது: பக்தர்கள் கடும் அதிர்ச்சி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட நள நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பஞ்சமுக வீர ஆஞ்சநேயரை வழிபட தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

இந்நிலையில் இந்த கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது. முன்னதாக கோயில் ஊழியர்கள், கொடிமரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடியேற்றுவதற்கான கயிறு கட்டும் போது திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தற்காலிகமாக ஒரு கொடிமரம் வைத்து கொடியேற்றினர். பிரமோற்சவ விழா கொடியேற்றத்தின்போது கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்